Monday, July 30, 2007

Wild Strawberries / காட்டுப் பழங்கள் அல்லது காட்டு ஸ்ட்ராபெரீஸ்

Wild Strawberries / காட்டுப் பழங்கள் அல்லது காட்டு ஸ்ட்ராபெரீஸ்
Bergman, ingmar / பெர்க்மென், இங்மார்

எனக்கு இங்ரிட் பெர்க்மான் தான் முதலில் அறிமுகம். காஸாபிளாங்கில் பார்த்து கிறங்கி இருந்த காலம். இவர் நடித்த படங்களைத் துரத்தி துரத்திப் பார்த்தேன். ஹிட்ச்காக்கின் படமொன்றில் கலக்கியிருந்தார்.படம் மறந்து விட்டது (சில நடிகைகள் ஏனோ சில விதத்தில் பார்த்த உடன் கவர்வார்கள் காரணம் புரியாது.

மதுபாலா போலோ அல்லது பத்மினி போல ஒரு வசீகரம் - முகத்தில்.

அதுவும் கருப்பு வெள்ளைப் படங்களில் இவர்களது வசீகரம் அதிகமாக இருக்கும். ஒரு "கலர்" படத்தில் இங்ரிடின் முக வசீகரம் அவ்வளவாக கவர வில்லை- வயதானதால் கூட இருக்கக்கூடும். அந்த சமயத்தில் என்க்கு இன்கிர்ட்டின் கணவராக இங்மார் அறிமுகம். தூய திரைப்பட ரசிகர்களுக்கு இந்த வரிகள் அதிர்சியாக இருக்கலாம். அதற்கு நான் என்ன செய்வது? முதலில் பார்த்தது செவந்த் சீல் என்னும் படம். அதனது இருமையான களம் மற்றும் தத்துவார்த்த கூறுகள் படத்தை மிகவும் ரசிக வைத்த ஒன்று. வைல்ட் ஸ்ட்ராபெரீஸ் என்னும் படமும் என்னைக் கவர்ந்த படம். இதைப் பார்த்து ஓரிரு வருடங்கள் இருக்கலாம். இவர் இன்று இறந்து போவார் என்று தெரிந்து இருந்தால், இரண்டு வாரங்களாக, ஒரு முறை renew (மீள்பதிவா?) செய்தும் பார்க்க முடியாமல், கடந்த வெள்ளியன்று திருப்பிக் கொடுத்த(கொடுத்தாக வேண்டிய) Silence என்னும் படத்தைப் பார்த்து அதைப் பற்றி எழுதியிர்க்கலாம். எனவே என்னிடம் இருந்த வைல்ட் ஸ்ட்ராபெரீஸ்/ செவந்த் சீல் என்னும் இரண்டு படங்களை எதை திரும்பப் பார்ப்பது என ஒரு முடிவெடுத்து, பார்த்து இப்பொழுது ஒரு திரைப் பார்வை. ஒரு சினிமா ரசிகனாக இருந்து இதைக் கூடச் செய்யாவிட்டால் ? லிவிங் ஸ்மைல் என்னுடைய திரைப் பார்வைகளை, முழுமையாக இல்லை, பல இடங்கள் தொடர்பும் இல்லை என ஒரு நண்பியின் விமர்சனமாக சொல்லியிருந்தார். எனக்கு எழுதவராது என்றாலும், கொஞ்சம் திருத்தமாக எழுதப் பார்க்கின்றேன். கதைக் காட்சிகளை விளக்காமல், திரைப்பார்வை செய்வது எப்படி என்பது இன்னமும் கை வரவில்லை; எழுதுவதெல்ல்லாம் எனக்கே வீணாயிருப்பதால், காட்சிகளை விளக்கியே எழுதப் பார்க்கின்றேன்.

இனி,

wild straberries ஒரு நினைவோடை கதையமைப்பு கொண்டது. வயதான, ஒரு "படித்த" , "வெளி" வாழ்வின் சிகரங்களைத் தொட்ட ஒரு நபரின் பின்னோக்கிய நினைவுச் சிதறல்கள் தான் இப்படம். கருப்பு வெள்ளைப் படம். இங்மார் பெர்க்மானின் படங்கள் , தன்மயமான கருத்தை, பார்வையைக், காட்டும் படங்கள்; பல சமயங்களில் நம்மையே "உள்ளே" பார்க்க வைக்கும் அளவு உக்கிரம் கொண்டவைகள். ஒரு மத்திய வயதை எட்டிய என்னையே, பல சமயம் உள்நோக்கிப் போக வைத்தது, இந்தக் கதையின் சில காட்சிகள் மற்றும் அதனைச் சுற்றி பின்னப்பட்ட வசனங்கள்; மிக எளிதாக மொழி மாற்றம் செய்யப் பட்ட சப்டைட்டில்கள், மிகவும் உதவியாக இருந்தது. இந்தப் படம் 1957ல் வந்தது, ஆனால் கதையோ இந்தக் காலத்திற்கும் பொறுந்துவது பெர்க்மானின் சிறப்பா அல்லது "வெளி" உலகில் அடைந்த மாற்றங்கள் போல அல்லாது உறைந்து கிடக்கும் "உள்" உலகமா? வியப்பாக இருக்கின்றது. இல்லாவிட்டால், 57ல் இருந்த ஸ்வீடிஸ் நடுத்தர வர்க்க மனநிலைக்கு , தமிழ் சூழலில் நாம் இப்பொழுது தான் வருகின்றோமா? மௌனியின் கதைகளின் சூழல் , இந்த மாதிரியான தன்மயப் பட்டதாக இருக்கும் (நான் படித்த சில கதைகளில்) ஆனால், அதில் இருந்த ஒரு குழம்பிய நடையோ/ குழம்பிய கருத்து மையமோ, இதில் இல்லாததாக எனக்குப் பட்டது; ஒரு நல்ல சிறுகதையைப் படித்த அனுபவம் எனக்கு இதில் கிடைத்தது எனலாம்.


முதல் காட்சியில் ஒரு வயதானவர் , தன் அலுவலக அறையில் உட்கார்ந்து இருக்கின்றார்; ஒரு நாய் அவரது காலடியில்;


கருப்பு வெள்ளைப் படங்களின் காமிராமேன் தன் பலத்தைக் காட்டக் கூடிய லைட்டிங் அமைப்பு; வெளிச்சமும் நிழலும் விழ வேண்டிய இடத்தில் மட்டும் விழுந்து காட்சியை அழகாக்கிக் கொண்டிருந்தது. வயதானவர்(78 வயது) தன்னைப் பற்றிச் சொல்லுகின்றார் அவரது மேஜையில் இருக்கும் புகைப்படங்களைக் காட்டியபடி; தான் ஒரு வேதாந்தி ( pedant) என்று உணர்ந்து சொல்லி தன்னுடைய 96 வயதில் இருக்கும் தன் தாயைப் பற்றிச் சொல்லி, தன் மனைவி பல வருடங்கள் முன் இறந்ததைச் சொல்லுகின்றார். தான் நாளை ஓரிடத்தில் கௌரவிக்கப் போவதையும் சொல்கின்றார்; பின் அவரது தூக்கத்தில் ஒரு கனவு - இந்தப் படத்தில் கனவும், அதில் வருபவைகளும் கதைக் கோர்வைக்கு முக்கியமாக இருப்பது. வயதானவர்களுக்கு வரும் செனிலிட்டி பற்றியும், அதன் ஆவேசமான Alzheimer's syndrome பற்றியும் அனுபவக் கதைக்களை கேட்டு பார்த்ததிலிருந்து அதன் உக்கிரத்தை நினைத்து ஒரு பயம். கனவுகளும் நினைவுகளும் பின்னிப் பிணந்து எதில் இருக்கின்றோம் எனத் தெரியாமல் இருக்கும் இரு வயதானவர்களைப் பற்றி , வெவ்வேறு மக்களிடம் ( ஒருவர் தமிழ்நாட்டில் வசிப்பவர்/ மற்றொருவர் பிலடெல்பியாவில் வசிக்கும் வெள்ளையர்) வெகு சமீபத்தில் அறிந்ததிலிருந்து, அதன் மீது ஒரு பயம்; இந்த வியாதி தனக்கு இருப்பது என உணரக் கூட முடியாமல் , மேலும் மேலும் மோசமாகக் கூடிய நிலை, வயிற்றில் ஒரு பயத்தை தெளிக்கும்; பெர்க்மான் செனிலிட்டியையும் / அல்கெமிர் சிண்ட்ரொம்யும் கலந்து இருக்க மாட்டர் என எனக்கு நான் முடிவு செய்து கொண்டு படம் பார்த்தேன்; அந்தப் பரிமானம் , இந்தப் படத்தை பார்க்கும் அனுபவத்தை சற்று கூட்டியிருக்கலாம். ஆனால் நான் தீர்க்கமாக முடிவெடுத்து அந்த பரிமானத்தைத் தவிர்த்தே இந்தப் படத்தைப் பார்த்தேன்


திரும்ப கனவுக்கு வருவோம்; ஒரு மதிய வேளை ; நல்ல வெயில் ; யாருமற்ற ஒரு தெரு ; தூரத்து கடிகாரத்தில் முள் எதுவும் இல்லை; இவர் நின்று பார்க்கின்றார் ;தனது பாக்கெட் கடிகாரத்தை எடுத்துப் பார்க்கின்றார்; அதிலும் முள் இல்லை; என்ன அர்த்தம்? காலம் நின்று விட்டதா? தூரத்தில் ஒரு உருவம்; இவர் அருகில் சென்று பார்க்கின்றார் ; அந்த உருவம் செத்து விழுகின்றது ; சற்று தூரத்தில் ஒரு ரதம் ; இவரருகே வந்தவுடன் அந்த ரதம் நிதானமிழந்து, ஒரு சவப் பெட்டியை கீழே விட்டுச் செல்லுகின்றது; சவப்பெட்டியில் ஒரு கை; இவர் அருகில் சென்று அந்தக் கையைப் பிடிக்கின்றார்; பிணம் வெளிவருகின்றது ; இவர் பார்க்கின்றார் ; அது இவரே தான் ; இவரது முகமும் சவக்களை கொள்கின்றது. வயதானவர்களின் சாவைப் பற்றிய பயத்தை இதைவிட சிறப்பாக சொல்லமுடியுமா தெரியவில்லை; சமீபகால இந்தியப் பயணத்தின் போது, காலம் வேட்டையாடிக் கொண்டிருப்பதை உணர வைக்கும், என் அப்பாவின் முகத்தில் இருக்கும் அந்த ஒரு பாவனை, சாவு பயம் தானா? சிறுவயது பயணங்களில் நான் விடைபெறும் போது என் கண்ணை அந்தளவு அவர் உற்று நோக்கியதாக நினைவில்லை; இபோழுது என் கண்ணை உறைய வைப்பது போல் இருக்கும் அவரது கண்களில் தெரியும் அந்தத் தொனி சொல்வது தான் என்ன?


தடாரென்று எழுந்து, தூங்கிக் கொண்டிருக்கும் தன் வீட்டு வேலைக்காரியை எழுப்பி, தன்னுடைய வெளியூர் பயனத்திற்கு உதவுமாறு சொல்லுகின்றார்;
இவருக்கும் இவரது வீட்டு வேலைக்காரிக்கும் இடையில் நடக்கும் sparringகள் மிகவும் ரசிப்பூட்டுபவை; சற்று உலர்ந்து இருக்கும் கதை களனுக்கு, இந்த வாக்குவாதங்கள் ஒரு நல்ல bufferதான். விமான பயந்திற்கு ஆர்வமாக இருக்கும் வேலைகாரியிடம் , தான் காரிலேயே செல்வதாகக் சொல்லி கிளம்புகின்றார். அழகான அவரது மருமகளும், அவருடன் பயணிப்பதாகச் சொல்லி வருகின்றார். மகனும் மருமகளும் பிரிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நேரம் அது. நகரத்தில் இருந்து கார் நகருகின்றது.
காரில் மருமகளும் மாமனாரும் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்; மாமனார் எந்தளவு ஒரு உருகிப் போன மனம் படைத்தவர் என விமர்சிக்கின்றார்; பெற்ற பிள்ளைக்கு படிக்க வைத்த செலவை கணக்கிட்டு கேட்பதைப் பற்றியும், பொருள் சம்பந்தமான கஷ்டங்கள் எல்லாம் பொருட்படுத்த தக்கவைகள் என்னும் அவரது வறட்டு வேதாந்த்தை விளக்கி எதனால் அவரது மகனும் மருமகளும் அவரை வெறுக்கின்றனர் என பட்டென்று போட்டு உடைக்கின்றாள்; இசாக்கிற்கு முகம் மாறுகின்றது. விரைவில் ஒரிடத்தில் காரை திருப்பி ஒரு ஒதுக்குப் புறமான இடத்திற்குச் செல்கின்றார். மருமகளிடம் , இந்த இடம் தன்னுடைய சிறு வயதில் கோடை காலங்களில் தன் உறவினர்களுடன் வரும் இடம் என்று சொல்லி ஒரு மரத்தடியில் சென்று அமர்ந்து நினைவலையை வீசுகின்றார். அந்த இடத்தில் ஒரு அழகி சாரா என்பவள் பெரீஸ் பழங்களைப் பொறுக்கிக் கொண்டிருக்கின்றாள்; இசாக்கின் தம்பி, இக்ரீட் அங்கு வந்து தன் அத்தை மகளோ/மாமன் மகளோ (ஸ்வீடனின் கசின் காதல்கள் எனக்கு ஆச்சர்யம் தான்)அவளிடம் காதல் தூது விடுகின்றான் ; ஒரு நிலையில் முத்தம் கூட அடித்து விடுகின்றான்; ஒரு கணத்தில் இணங்கி,
பின் வெடித்து அழுகின்றாள்; அதன் போது அவள் , இசாக்கிடம் இருக்கும் தன் விருப்பத்தையும் சொல்லி அழுகின்றாள்; படித்த இசாக்கும் பிடித்திருக்னின்றது விளையாட்டுப் பிள்ளை இக்ரிடும் பிடித்திருக்கின்றது - என்ன செய்ய? ந்னைவோடையில் , இசாக் இதை ரசித்துப் பார்க்கின்றார். நினைவோடை சமயத்தில் இசாக் , தன் தற்கால உருவத்துடன் படத்தில் இயந்து கொள்ளுகின்றார்; 1957ல் அது ஒரு மிகப்பெரிய புதுமையாக இருந்திருக்கலாம்.


சட்டென்று நிகழ்காலத்தில் ஒரு இளம் பெண் இவருடன் வந்து பேசுகின்றாள் ; துடிப்பான பெண் ; தன்னுடைய துடிப்புத்தனத்திற்கு தன்னுடைய கன்னித் தன்மையை காரணக் காட்டுகின்றால் பின்னொரு சமயம். தான் இட்டாலிக்கி செல்லவிருப்பதாகவும் , இசாக்கிடன் பயணம் செய்யலாம என கேட்டு அவரது சம்மதம் வாங்கி, பின் தன்னுடன் வந்திருக்கும் இரு ஆண் நண்பர்களை காட்டுகின்றாள்.


ஒருவன் இசாக்கைப் போன்ற வேதாந்தி, அந்த இருமாப்பும் தெரிகின்றது. மற்றவன் ஒரு சமய போதகன்; அவனின் எளிமையும் தெரிகின்றது; சாரா என்ற இசாக்கின் முன்னாள் காதலிப் பெயர் கொண்ட இவளுக்கும் , தன் இரு நண்பர்களைப் பிடிக்கின்றது வெவ்வேறு காரணங்களுக்கு, பழைய சாராவைப் போலவே.

இதற்கிடையில் சதா வாக்குவாதத்தில் இருக்கும் ஒரு கணவன் மனைவி, இவர்களுடன் பயணிக்க நேர்கின்றது - அந்தப் பயணிகளின் , dysfunctional attidute, இந்த வண்டியில் வருபவர்களை உறைய வைக்கின்றது.

பின்னால் மாமனார் தன்னுடைய வாழ்க்கை அவர்களைப் போன்று தான் இருந்தது என்கின்றார்; மருமகளோ தான் அவ்வாறு ஆகிவிடக் கூடாது என்பதற்காகக்தான் , மணவிலக்கு பெற எண்ணியதாக சொல்கின்றார். மருமகள், அவர்களை நடு ரோட்டில் இறக்கிவிடச் சொல்ல , பயணம் , அவர்கள் இல்லாமல் செல்கின்றது.

ஓரிடத்தில் , இசாக்கும் மருமகளும், இசாக்கின் 96 வயது தாயைக் காணச் செல்லுகின்றார். இசாக்கின் மருமகளை, தன் மருமகள் என தவறாக நினைத்து அல்லது செனிலிட்டியில் (Senility), பழைய காண்டுடன் பேசுகின்றார். மாமியார் மருமகள் பிரச்சனை கால இட பரிமாணங்களை இந்தளவிற்கு மீறியிருக்கும் என் இருப்பது ஆச்சர்யம் தான்; 96 வயது தாய் சாதாரணமாக(?) பேசப் பேச, மருமகள் முகம் இறுகுகின்றது. பின்னால் , இசாக்கின் தாயின் பேச்சில் இருக்கும் தனிமைக் கொடுமையும், அதனால் இருகிப் போயிருக்கும் அவரது சிந்தனைகளும், தனது கணவனுள்ளும் ஊறியிர்க்கும் ஆச்சர்யத்தை வெளிப்படித்துவார்.

கூட்டத்துடன் இருக்கும் வாய்ப்பிருந்தும் தனிப்பட்டு போவது , இந்த வேதாந்திகளின் வாழ்வு முறையோ என சந்தேகித்திருக்கின்றேன். இந்தப் படம் "அதையே" இன்னமும் சிறப்பாகக் காட்டும் போது ஆச்சர்யம் தான்.

இசாக் மேலும் கனவுகள் காண்கின்றார்; தன் மனைவி எப்போதோ , தன் தம்பியிடமே (அது போல் தான் இருந்தது) சோரம் போய், அதை தன் கணவனிடம் சொன்னால், தன் கணவனின் வேதாந்த மனம் எப்படி எதிர் கொள்ளும் என ஒருவித நக்கலுடன் பேசியதை , தன் கனவில் மீண்டும் காண்கின்றார்.
இடையில் தன் மனைவின் மரணத்தை தானே வரவழைத்திருக்கும் சாத்தியமும் வசனங்களில் வருகின்றது. விக்கித்து எழுந்து அருகில் சிகரெட் பிடித்துக் கொண்டிருக்கும் தன் மருமகளிடம் ,ஏன் தன் மகனை விலகிச் செல்கின்றார் என வினவுகின்றார். மருமகளிடமிருந்த்ய் , தன் மகன், தன்னைப் போல ஒரு வறட்டு வேதாந்தி என அறிந்து வருத்தம் கொள்கின்றார்.

பின் அனைவரும் விருது வழங்கும் இடத்திற்குச் சென்று , பலத்த ஆரவாரத்துடன் விருதினைப் பெற்றுக்கொள்வது ஒரு நல்ல முரண் தான்.விருதின் போது தன்னை பழைய ந்கழ்வுகள் ஆக்கிரமித்ததை சொல்லுகின்றார். சற்று காலம் கடந்து திருந்து ந்னைப்பது போல, தன் வேலைக்காரியிடம் தன்னை இனி மரியாதையாக கூப்பிடாமல், பெயரைச் சொல்லி கூப்பிட சொல்கின்றார். அதற்கு வேலைக்காரியோ , நக்கலுடன் , என்ன உடம்புக்கு என்னவாயிற்று , ஏன் இப்படியெல்லாம் பேசிகிறீர்கள் என செல்லி விலகுகின்றார்.

தன் மகனும், மருமகளும் சேரக் கூடிய வாய்ப்பிருப்பதைப் பார்த்தவாறு தூங்க முனைகின்றார். முதுமையின் சோகம் தாக்கும் போது சிறுவயது நினைவுகளை நினத்து அதன் குதூகலத்தி;ல் தூங்கப் பார்க்கின்றார். ஒரு வயதானவரின் மனப் போரட்டங்களை , இதை விடச் சிறப்பாக படம் எடுக்க முடியாது என நினைக்கின்றேன்.