Monday, September 25, 2006

V for Vendetta

V for Vendetta - ஒரு விமர்சனம்



மற்றுமொரு ஆர்வெளியன் காலப் படம். ஓரு சர்வாதிகார அரசு. கட்டுக்கடங்கா அதிகாரத்தை கையகற்ற மக்களிடையே பயத்தை கிளப்பி மக்கள் சுதந்திரத்தை ஒவ்வொன்றாக குறைக்கின்றது. தன்னுடைய மக்களையே கொலையும் செய்து அதன் பழியை, சிறுபான்மையினர் மீதும் நலிந்தவர் மீதும் போட்டு மக்களிடையே கீலியை கிளப்புகின்றது. செய்தி நிறுவணங்களை கையகப்படுத்தி, செய்திகளைத் திரிக்கின்றது.. ன்றது ...ன்றது ..ன்றது



ஓரு மனிதன் தீயிலிருந்து முளைத்து, அனைத்து தவறுக்கும் காரணமானவார்களை களையெடுத்து, ஒரு அடையாளமாக அரசு கட்டடங்களை கொளுத்துகின்றான்.






என்ன விஜ்யகாந்த் பட வாசனை அடிக்கின்றதா?





என்னத்தைச் சொல்ல . இரண்டு மணி நேரமும் என்னைப் படம் பார்க்க வைத்து விட்டது, இந்த பட டைரக்க்டரின் சாதனை தான். இல்லை இதே போல ஒரு சூழலை உண்மையிலேயே உருவாக்கிவரும் இந்த புஷ்ஷின் சாதனையாகக் கூட இருக்கலாம். பல கதாமாந்தர்கள், நிகழ் சூழலை பிரதிபலிக்கின்றார்கள். சினிமாவின் பொதுமக்களும் டீவிப் பெட்டியின் முன்பும் , பார்-கிளப்புகள் டீவி முன்பும், "ஹாஸ்பிடல்" டீவி முன்பும் உக்காந்து புலம்புகிறவர்கள் தான்.


கூடவே இந்தப் படத்தில் நடாலியா ஃபோர்ட்மானும் மொட்டைத் தலையுடன் வருகின்றார். ஆமாம் ஆமாம் மொட்டையடிக்கப் படும் காட்சியும் படத்தில் உண்டு






அழகான கதாநாயகிகள் (நாயகன்களும்), அனுதாபம் தரக்கூடிய, அழகை குலைத்துக் கொள்ளக்குடிய கதாபாத்திரங்களைப் பெற்று, அதன் மூலம் சிறந்த நடிகை(கன்)பட்டம் பெற்றுக் கொள்வது காலக்கொடுமைதான். என்னச் செய்ய?









இந்தப் படம் தேவையான கதை நுணுக்கங்களை தராமல், இந்தக் காலக்கட்டத்தின் மீதான பொதுபுத்தியை நம்பி எடுக்கப்பட்ட படம். மாட்ரிக்ஸ் பட சகோதர்களை படத்தின் கடைசியில் பார்த்த போது "ஓஹோ அதான் இப்படியா" என்ற எண்ணம் வராமலில்லை. ம்ஹும் ஏதேனும் ஒரு தமிழ்படம் அட்லீஸ்ட் ஒரு விஜயகாந்த் படமாவது பார்த்திருக்கலாம்


Thanks to VforVendetta.com for the above pictures

0 comments: